Site icon அநேகன்

பி.டி.பி.டி.என் விவகாரத்தில் என்னைக் குறை சொல்வதா ??

கோலாலம்பூர், செப்.13 –

பி.டி.பி.டி.என் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவி கழகத்தின் கடன் விவகாரத்தில் தாம் பொய்யான தகவல்களைக் கூறுவதாக நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கடுமையாக சாடியுள்ளார்.

கல்வி கடனுதவி கழகத்தின் அனைத்து கடன்களையும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தள்ளுப்படி செய்யும் என தாம் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என நஜிப் கூறினார். இந்த விவகாரத்தில் பி.டி.பி.டி.என் தலைவர் வான் சைபூல் வான் ஜான் தம்மை குறைக் கூறுவதில் நியாயமில்லை என்று நஜிப் மேலும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுகாக, பி.டி.பி.டி.என் கடனுதவியை செலுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் எதிர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டது நம்பிக்கைக் கூட்டணிதான் என்பதை மறந்து விட வேண்டாம் என நஜிப் நினைவுறுத்தினார். இதனால் அதிகமானோர் தங்களின் கல்வி கடன்களை செலுத்தவில்லை.

14வது பொதுத் தேர்தலில்  வெற்றி பெற்றால் தேசிய உயர்கல்வி கடனுதவி கழகத்தின் கடன்களை தள்ளுப்படி செய்வதாக நம்பிக்கை கூட்டணி வெற்று வாக்குறுதியை வழங்கியதாகவும் நஜிப் தெரிவித்தார்.

 

Exit mobile version