புத்ராஜெயா, செப்.15
இந்த ஆண்டுக்கான் யூபிஎஸ் ஆர் தேர்வு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 440,743 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
இவர்களில் 430,031 மாணவர்கள் தேசியப் பள்ளிகளையும் 10,712 மாணவர்கள் தனியார் பள்ளிகளையும் சேர்ந்தவர்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அமைச்சு அறிவுறுத்தியது.
நாடு முழுவதும் 8,100 தேர்வு மையங்கள் திறக்கப்படுகின்றன. அதில் 54,253 அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள்.

