புத்ராஜெயா, செப்.15
நிறுவனங்கள், தனி நபர்களின் வருமான வரியை உயர்த்தும் திட்டத்தை அரசு கொண்டிருக்கவில்லை என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கத்தின் வரி வருமானத்தை விரிவுப்படுத்தும் வேலையை வரி சீர்திருத்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். நாட்டின் வரி வசூல் நடைமுறையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் முழுமையன அணுகுமுறையாக இது அமையும் என்றும் மக்களின் சுமையை குறைக்கும் வழி வகைகளை இக்குழு ஆராயும் என்றும் அவர் சொன்னார்.
வரி சீர்திருத்தக் குழுத் தலைவராக டான்ஸ்ரீ ஹஸ்மா அப்துல்லா நியமிக்கப்பட்டிருப்பத்தை அறிவித்த குவான் எங், வரி நிர்வாகத்தில் ஹஸ்மாவுக்கு 37 ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இவர் 5 ஆண்டுகள் உள்நாட்டு வருமான வரித் துறைத் தலைமை இயக்குநராக பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

