Site icon அநேகன்

எண்ணெய் விலை குறைந்தால் 2019 வரவு செலவு திட்டத்தில் மறுஆய்வு செய்யப்படும் – லிம் குவான் எங்

பெட்டாலிங் ஜெயா, டிச.23
எண்ணெய் விலை பீப்பாய்க்கு 50 டாலருக்கு குறைவாய் இருந்தால் மட்டுமே 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அரசு மறுஆய்வு செய்யும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

அடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பீப்பாய்க்கு 70 டாலர் அடிப்படையில் நிதியமைச்சு தயார் செய்துள்ளது.

தற்போது கச்சா எண்ணெயை தினசரி விலை அடிப்படையில் இல்லாமல் அதன் சராசரி விலையில் அரசு ஆய்வு செய்துக் கொண்டிருப்பதால் வரவு செலவு திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 52லிருந்து 72 டாலராக உயர்ந்த போது பட்ஜெட்டை அரசு மறுஆய்வு செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார்.

அதனால் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 50 டாலருக்கும் குறைவாய் இருந்தால் மட்டுமே பட்ஜெட்டை அரசு மறுஆய்வு செய்யும் என்று கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு ஓட்டப்பந்தைய நிகழ்வை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் லிம் குவான் எங் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைக்கு எண்ணெய் விலை 50 டாலருக்கும் மேல்தான் இருக்கிறது. இருப்பினும் அதன் விலையை அடுத்தாண்டில் அரசு கண்காணித்து வரும் என்று அவர் சொன்னார்.

Exit mobile version