Site icon அநேகன்

அடிப்பின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் – டாக்டர் லீ பூன் சாய் !

ஈப்போ, டிச.26 –

சுபாங் ஜெயா, சீ பீல்ட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் முன்புறம் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்டதாக நம்பப்படும் தீயணைப்பு வீரர் முஹமட் அடிப் முஹமட் காசிம்,  மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் தயாராகி விடும் என சுகாதாரத்துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக பிரேத பரிசோதனை அறிக்கைக்கு ரத்த சோதனைத் தேவைப்படும் என்றும் இன்னும் ஒரு மாதத்தில் அந்த அறிக்கை தயாராகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  மைக்கல் ஜேக்சன், விட்னி ஹீயூஸ்டன் போன்ற பிரபலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகுவதற்கு நீண்ட காலம் பிடித்ததையும் அவர் சுட்டி காட்டினார்.

இந்த அறிக்கையின் மூலம் அடிப்பிற்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ள முடியும் என்று டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.  அடிப்பின் மாரணத்திற்கான காரணத்தை அறிந்திட, காயம் தொடர்பான அறிக்கையே போதும் என்றால், நோயியல் மருத்துவர்கள் ரத்த சோதனை அறிக்கைக்கு காத்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி 24 வயதுடைய முஹமட் அடிப்,  சீ பீல்ட் ஶ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் முன்புறம், கலவரக்காரர்களால் தாக்கப்பட்டதால், சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தேசிய இருதய கழகத்தில் மரணம் அடைந்தார்.

Exit mobile version