கோலாலம்பூர், டிச 26
பேரணி ஒன்றில் நிந்தனை தன்மையிலான உரையை ஆற்றியதாக டத்தோ அஸ்வான்டின் ஹம்சா அரிபின் நேற்று கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்கிழமை கிள்ளானில் நடைபெற்ற பேரணியில் ஜாரிங்கான் மிலாயு மலேசியா எனும் அரசு சாரா இயக்கத்தின் தலைவரான டத்தோ அஸ்வான்டின் இன்று பகல் 2.40 மணியளவில் கோலாலம்பூர், கிராமாட் பேரங்காடி அருகே கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் எஸ்ஏசி பட்சில் அகமட் தெரிவித்தார்.
மற்றவர்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதால் குற்றவியல் சட்டம் பிரிவு 504,506 ஆகிய விதிகள் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.
பிரதமர் துறையின் தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேதமூர்த்தியை தரக்குறைவான வார்த்தையால் பேசியதற்காக விசாரிக்கப்படுகின்றார்.
அதுமட்டுமின்றி, தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் போலீஸ் நிலையத்தை தாக்குவோம் என்றும் அவர் பேசியிருக்கின்றார்.

