கோலாலம்பூர், ஜன 1
புகை பிடிக்கும் தடையை உணவகங்கள் மட்டுமல்லாது பொது இடங்களுக்கும் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்தார்.
உணவகங்கள், உணவுக் கடைகளுக்கானப் புகை பிடிக்கும் தடை இன்று தொடங்கி அமலுக்கு வந்த நிலையில் அனைத்து விதமான உணவகங்கள், உணவுக் கடைகளும் உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் தடை அமல்படுத்தப்பட்டு 6 மாதத் தொடக்கத்தில் அமலாக்கத் தரப்பினர் நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டார்கள். தற்போது இந்தப் புகை பிடிக்கும் தடை குறித்து விழிப்புணர்வுக் கல்வி வாயிலாக பொதுமக்கள், உணவக உரிமையாளர்களுக்கு விளக்கமளிப்பை அமைச்சு வழங்கும். இதன் மூலம் புகை பிடிக்கும் தடை எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற காரணத்தை மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.
உடல் ஆரோக்கியத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதை வலியுறுத்த விரும்புகிறோம். இந்த தடைக்கான எஸ்ஓபி எனப்படும் நிரந்த நடவடிக்கை நடைமுறை தொடர்பில் 3,000க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள், உணவகங்களில் அமைச்சுடனான சந்திப்புக் கூட்டத்தின் போது விளக்கமளிப்பு வழங்கப்பட்டு விட்டது.
இந்தத் தடைக்காக ஒரு எஸ்ஒபி அமல்படுத்தப்பட்டதில் அமலாக்க அதிகாரிகளுக்கும் நன்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதில் அபராதத்திற்கான நோட்டிசை எப்போது வெளியிட வேண்டாம் என்பது அவர்களுக்குத் தெரியும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.
இந்த புகை பிடிக்கும் தடையில் உணவகங்களில் புகை பிடிப்போருக்குக் அதிகபட்சம் 10,000 வெள்ளி அபராதம் அல்லது 2 ஆண்டுக்கும் மேலான சிறை விதிக்கப்படும். புகை பிடிக்கும் தடைக்கான எச்சரிகைப் பலகையை வைக்கத் தவறிய உணவக உரிமையாளர்களுக்கு 3,000 வெள்ளிக்கு மேற்போகாத அபராதம் அல்லது 6 மாதத்திற்கு மேலான சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதில் புகை பிடிக்க அனுமதிக்கும் உணவக உரிமையாளர்களுக்கு 5,000 வெள்ளி அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

