கோலாலம்பூர், ஜன 4
பக்காத்தான் ஹராப்பான் வலுவான கூட்டணிதான் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது திட்டவட்டமாக கூறினார்.
கடந்த 14ஆவது பொது தேர்தலில் ஆட்சியை பிடித்த நம்பிக்கை கூட்டது தற்போது பலவீனமாகிவிட்டதாக சிலர் கூறி வருவதை அவர் மறுத்துள்ளார்.
நம்பிக்கை கூட்டணி தொடர்ந்து வலுவான கட்சியாக செயல்பட்டு வருகின்றது. நாட்டின் அரசியல் நிலவரங்கள் பற்றி நாங்கள் ஆழமாக விவாதிப்பதற்கு அமைதியான முறையில் கூட்டம் நடத்தியிருக்கின்றோம். ஒன்றிணைந்து பணியாற்ற கூடிய ஒரு கூட்டணி எனும் முறையில் நாங்கள் விவாதித்தோம் என்று பிரதமர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நம்பிக்கை கூட்டணியின தேசிய தலைவர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் கூறினார்.
அமைச்சரவை மற்றும் நம்பிக்கை கூட்டணியின் கூட்டங்களில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அமைதியான முறையிலேயே கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இன்றைய கூட்டத்தில் பிகேஆர் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் கலந்து கொண்டார். அதிகார பரிமாற்றத்திற்கான காலவரம்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதில் எந்த பிரச்சினையும் இல்லை அதற்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று அன்வார் பதிலளித்தார்
அடுத்த பிரதமராக பதவியேற்பதற்கு எதிராக நம்பிக்கை கூட்டணிக்குள் சதிநாச வேலைகள் நடக்கிறது என இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டிருப்பது குறித்து வினவப்பட்டபோது அவர் அதனை மறுத்தார்.

