ஈப்போ பிப் 27-
இங்குள்ள வழக்கறிஞர் நிறுவனத்தின் முன்னாள் குமஸ்தாவிற்க்கு எதிராக 138 மோசடி குற்றச்சாட்டுகள் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
வி். பத்மாவதி (வயது 53) என்பவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்மான் அபு ஹாசான் அவரை 30,000 வெள்ளி தனி நபர் ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கியதுடன் அவரின் கடப்பிதழை நீதி மன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரை பிறப்பித்தார்.
வி.பத்மாவதி இந்தக் குற்றத்தை கடந்த 2012 ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட நாளில் ஈப்போவில் உள்ள சோங் அண்ட் போ வழக்கறிஞர் நிறவனத்தில் புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டு பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கறிஞர் நிறுவனத்தில் கணக்காய்வாளர் குமாஸ்தாவாக இருந்தபோது நிறவன நிதியிலிருந்து சிறுக சிறுக காசோலை வழி பணத்தை எடுத்துள்ளார் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் டிபிபியாக பைசி மாட் யூசோப் மற்றும் பத்மாவதி சார்பில் வழக்கறிஞர் கே. நாதன் ஆஜரானா்கள். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

