Site icon அநேகன்

செமினி சட்டமன்ற இடைத்தேர்தல்; 70 விழுக்காட்டினர் வாக்களிக்க வரவேண்டும்

செமினி, பிப் 27-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில்  வாக்களிக்க வருமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கும் பணியில் தகவல் பிரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த அறிவிப்புகள், செமினி தொகுதி முழுவதிலும், குறிப்பாக 23 மாவட்ட வாக்களிப்பு மையங்கள் இருக்கும் பகுதிகளிலும் செய்யப்படுபதாக உலு லாங்காட் மாவட்ட தகவல் அதிகாரி ஹபிசான் அம்சா தெரிவித்தார்.

நடமாடும் அறிவிப்புப் பிரிவைப் பயன்படுத்தும் இந்தத் திட்டம் இடைத்தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் காலங்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இதுவரையில் நான்கு இடைத்தேர்தல்கள் நடந்திருக்கின்றன.

ஜனவரியில் நடைபெற்ற கேமரன் மலை இடைத்தேர்தலில் 68.79 விழுக்காட்டினர் வாக்களித்திருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலில் 49.9 விழுக்காட்டினரும், பலாக்கோங்கில் 43 விழுக்காட்டினரும் ஸ்ரீசெத்தியாவில் 44 விழுக்காட்டினரும், போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 58.3 விழுக்காட்டினர் வாக்களித்திருக்கின்றனர்.

இந்நிலையில், செமினி இடைத் தேர்தலில் 70 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version