Site icon அநேகன்

பொதுப்பணி அமைச்சின் சிறப்பு ஆலோசகராக தியான் சுவா

கோலாலம்பூர். பிப் 28-

பொதுப்பணி  அமைச்சின் சிறப்பு ஆலோசகராக தியான் சுவா   நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்து நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரான  தியான் சுவா வின் இந்த நியமனம் மார்ச் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பிகே.ஆர். கட்சியின் உதவி தலைவருமான தியன் சுவா பரந்த அனுபவம், கொள்கை பிடிப்பு, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் சிறந்த தொடர்பை கொண்டுள்ளார் என பொதுப் பணி அமைச்சர் பாரு பியன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார்.

55 வயதுடைய தியான் சுவா  ஆஸ்த்ரேலியாவின்  சிட்னி பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். மேலும் வரலாறு மற்றும் தத்துவ அறிவியலில் அவர் முதுகலைப் பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய மனித உரிமை சங்கத்தின் விருது மற்றும் பல்வேறு அனைத்துலக அமைப்புகளின்  விருதுகளையும் தியன் சுவா பெற்றிருக்கிறார்.

Exit mobile version