Site icon அநேகன்

செமினி ஒதுக்கீடு மீட்பு: சுற்றுலா அமைச்சரின் செயலை பாராட்டினார் ஜூரைடா

செமினி பிப். 28-

இங்குள்ள மண்டபம் ஒன்றின் பராமரிப்புக்கான 80,000 வெள்ளி ஒதுக்கீட்டை மீட்டுக் கொண்ட சுற்றுலா மற்றும் பாரம்பரிய அமைச்சர் முகமதின் கெத்தாப்பியின் செயலை பிகேஆர் உதவி தலைவர் ஜூரைடா கமாருடின் பாராட்டினார்.

வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த ஒதுக்கீடு என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து இதனை அமைச்சர் உடனடியாக மீட்டுக் கொண்டதாக ஜூரைடா  தெரிவித்தார்.

முகமதினின் இந்நடவடிக்கையானது தவறை ஏற்றுக் கொண்டு அதனைத் திருத்திக் கொள்ளும் புதிய அரசாங்கத்தின் பண்பையே பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

“மக்களைப் பற்றி அவர் யோசித்துப் பார்த்திருக்கிறார். அதே சமயம், நாம் இன்னும் பிரசார கால கட்டத்தில்தான் இருக்கிறோம். தனது தவறை ஒப்புக் கொண்ட அமைச்சர் அதனை  உடனடியாக மீட்டுக் கொண்டார்” என்றார்

ஜூரைடா.

” இந்த  ஒதுக்கீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது ஒரு தேர்தல் யுக்தி என்று தவறாக எண்ண வேண்டாம். இந்த ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது” என்று கம்போங் பாரு செமினியில் பாக்காத்தான் வேட்பாளர் முகமது அய்மான் ஜைனாலியுடன் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறிப்பிட்டார்.

கைவினைப் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பெரானாங்கில் ஹாஜி முகமது சிலின் மண்டபத்தைப் பராமரிப்பதற்காக இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இதனை பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு வழங்கியுள்ளது.

Exit mobile version