Site icon அநேகன்

பிரசன்னா டிக்ஸாவின் மை கார்டு எண் மாற்றமா? -முகைதீன் மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 1-

பாலர் பள்ளியில் ஆசிரியை திருமதி இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்ஸாவின் அடையாள கார்டு எண் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மறுத்தார்.

தேசிய பதவித் துறையின் தலைமை இயக்குநரிடம் தொடர்புக் கொண்டு தாம் இது குறித்து வினவியதாகவும் அப்போது பிரசன்னா டிக்ஸாவின் அடையாள கார்டு எண் மாற்றப்படவில்லை என்பதை தலைமை இயக்குநர் தம்மிடம் உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

பிரசன்னா டிக்ஸாவின் அடையாள கார்டு எண் மாற்றப்பட்டிருக்கும் தகவல் அடிப்படையற்ற ஒன்று என்றும் அவர் சொன்னார்.

அதோடு இந்த விவகாரம் குறித்து தேசிய பதவித் துறையின் தலைமை இயக்குநர் விளக்கம் ஒன்றை வெளியிடும்படியும் தாம் கேட்டுக் கொண்டதாகவும் முகைதீன் கூறினார்.

தாமான் பெலாங்கியில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

Exit mobile version