Site icon அநேகன்

இன்னும் வாக்காளர்களின் ஆதரவைத் தேடுவதா?  -தேர்தல் ஆணையம் கண்டனம்

செமினி, மார்ச் 2-

செமினி இடைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நடவடிக்கையை உடனடியாகக்  கைவிடும்படி சம்பந்தப்பட்ட கட்சிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

“வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் பணியில் கட்சிகள் இன்னும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது” என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸஹார் அஜிசான் ஹருண் தெரிவித்தார்.

“தங்களின் இந்நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு அமலாக்க தரப்பினர் வாயிலாக நான் பணித்தேன்” என்று இங்குள்ள பண்டார் ஸ்ரீ புத்ரா இடைநிலைப் பள்ளியில் வாக்களிப்பு நடவடிக்கையைப்  பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமது நோர் (வயது 57) கடந்த ஜனவரி 11ஆம் தேதி மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

Exit mobile version