கோலாலம்பூர், மார்ச் 2-
ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை வரும் மார்ச் 9ஆம் தேதி பிகேஆர் முன்மொழியும். அன்றைய தினம் நடைபெறவிருக்கும் நம்பிக்கை கூட்டணியில் தலைவர் மன்ற கூட்டத்தில் பிகேஆர் அத்தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கும்.
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதின் இஸ்மையில் இத்தகவலை வெளியிட்டார். அதற்கு முன்னதாக பிகேஆர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தும். அப்படி தேர்வு செய்யப்படும் வேட்பாளர் நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றத்தில் சமர்பிக்கப்படுவார்.
எனினும், இதுவரை ரந்தாவ் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் எவரையும் பிகேஆர் முடிவு செய்யவில்லை என சைபுடின் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் பிகேஆர் மற்றும் ரந்தாவ் பிகேஆர் தொகுதி வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை சமர்பிக்கப்படி கேட்டுக் கொள்ளப்படிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

