Site icon அநேகன்

பேரா மாநில நில விவகாரங்களை சிவநேசன் பார்த்துக்கொள்வார் -அமைச்சர் குலசேகரன்

ஈப்போ மார்ச் 3-

பேரா மாநிலத்தில் எழுந்துள்ள  இந்தியர்களின் நில விவகாரங்களுக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தீர்வுக்கான நடவடிக்கை எடுப்பார் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

தற்பொழுது பேராவில் எழுந்துள்ள பெம்பான் நிலத்திட்டம், புந்தோங்கில் உள்ள தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய நில விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டபோது அதற்கு இவ்வாறு பதில் அளித்தார்.

நான் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்தான்,  தற்பொழுது அமைச்சராக இருந்து சேவையை வழங்கி வருகிறேன். மாநிலத்தில் உள்ள உள்ள நில விவகாரங்களுக்கு தீர்வுக்காண சிவநேசன் உட்பட மற்றவர்கள் இருக்கிறார்கள அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

ஜெலப்பாங்கில் உள்ள தொழில் நுட்ப கல்விக் கழகத்தில் சத்ரியா கல்வி மைய மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழவுக்குப் பின்னர்  இந்த விளக்கத்தை தந்தார்.

முன்னதாக அரசாங்கத்தில் இந்திய இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மேலும் பேசிய அவர் , அண்மையில் தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனை மலேசியாவில் சினிமா தொடர்புடைய தொழில்நுட்ப கல்வியை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கியதையும் குறிப்பிட்டார் .

இங்கு நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் சுமார் 300 மாணவர்கள் கலந்துக்கொண்டனர் .

Exit mobile version