Site icon அநேகன்

மென்செஸ்டர் சிட்டியில் இருந்து பில் போடேன் வெளியேற வேண்டும் – ரியோ பெர்டினான்ட் !

மென்செஸ்டர், மார்ச்.5 –

மென்செஸ்டர் சிட்டியின் இளம் ஆட்டக்காரர் பில் போடேன்,  தமது கால்பந்து வாழ்க்கையில் உச்சத்தை அடைய வேண்டும் என்றால் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுவதற்கு ஆலோசிக்க வேண்டும் என மென்செஸ்டர் யுனைடெட் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரர் ரியோ பெர்டினான்ட் தெரிவித்துள்ளார்.

பொருசியா டார்ட்மூண்ட் கிளப்பில் தற்போது விளையாடி வரும் ஜாடோன் சன்சோவைப் போல், பில் போடேனும், மென்செஸ்டர் சிட்டியில் இருந்து வெளியேற வேண்டும். இந்த பருவத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியில் பங்கேற்ற 21 ஆட்டங்களில் பில் போடேன் ஐந்து கோல்களைப் போட்டிருக்கிறார்.

எனினும் அதிகமான வாய்ப்புகளைப் பெற வேண்டுமென்றால், பில் போடேன், மென்செஸ்டர் சிட்டியில் தொடர்ந்து நிலைத்திருப்பதில் பலனில்லை என பெர்டினான்ட் கூறினார். மென்செஸ்டர் சிட்டியில் தற்போது அதிகமான நட்சத்திர ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர்.

எனவே போடேனுக்கான வாய்ப்புகள் குறைந்தே காணப்படும். இந்நிலையை மாற்ற வேண்டும் என்றால், பில் போடேன் அந்த அணியை  விட்டு வெளியேற வேண்டும் என பெர்டினான்ட் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்ட் கிளப்புக்கு மாற்றலாகி சென்ற ஜாடோன் சன்சோ தற்போது ஐரோப்பாவின் முக்கிய இளம் ஆட்டக்காரர்களில் ஒருவராக விளங்குகிறார்.

Exit mobile version