Site icon அநேகன்

ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் கைது ????

கோலாலம்பூர், மார்ச்.5-

மலேசியாவின் தாய் கோயிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் டான்ஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட மூவர் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு ஊழல் தடுப்பு ஆணையம் அதிரடி சோதனையில் ஈடுபட்டதாக சமூக தளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இதனை மலேசியாகினி இணையத்தள பதிவேடு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே அவரது இல்லத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது உறுதி என்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டிலிருந்து நகைகள் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இது வரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரின் மகனும் லஞ்ச தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்த வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய சோதனை நடவடிக்கை குறித்த நிழல்படங்களை சமூக தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.  இதுகுறித்து லஞ்ச ஆணையம் வெளியிடும் அறிக்கைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

அதோடு நீதிமன்றத்தில் மூன்று நாட்கள் அவர்களை தடுத்து வைப்பதற்கான ஆணையையும் லஞ்ச தடுப்பு ஆணையம் பெற்றுள்ளது.

Exit mobile version