Site icon அநேகன்

ஜோகூர் ஊடக விருது; செய்தியாளர் தீபா ராமன் வென்றார்

ஜோகூர், மார்ச் 6-

2018ஆம் ஆண்டிற்கான சிறந்த செய்தியாளர்களுக்கான போட்டியில் ஜோகூர் ஊடக விருதை தமிழ் நேசனின் செய்தியாளர் தீபா ராமன் வென்றார்.

இப்போட்டியில் மேம்பாட்டுக்கானப் பிரிவில் இவருக்கு இந்த விருதும் வெ. 2000 ரொக்க பரிசும் சான்றிதழும் கிடைத்தது.

வலைந்து செல்லும் பாலமா? அல்லது மூன்றாவது பாலாமா? எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு இந்த விருது கிடைத்தது.

கடந்த 2016ஆண்டில் ஜோகூர் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்து பற்றி எழுதிய கட்டுரைக்காக இவர் விருது பெற்றா என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version