Site icon அநேகன்

உண்மை நிலையை அறிந்து செயல்படுவீர்

கோலாலம்பூர், மார்ச் 7-

இந்துக்கள், இந்தியர்கள் மட்டுமல்லாது, அனைத்து இன,மத மக்களும் வழிபடக்கூடிய திருத்தலம், உலக புகழ்பெற்ற பத்துமலை திருக்கோயில். அத்தனை பேரன்புடன் அதை வழங்கிய பண்பு எங்கள் இனத்தின் மாண்பு. இது பொதுவாகவே தமிழர்கள் கோயில் அனைத்திலும் நடைமுறையாகவே உள்ளது.

ஆனால் அதையே ஆயுதமாக்கி, சந்தடிச் சாக்கில் உள் நுழைந்து தமிழர் எங்கள் உரிமையை சூறையாட எண்ணுவது, பேரன்பு கொண்ட எம்மினத்திடம் முரண்பாடான போக்கை கையாண்டு, பெரும்பகையை உருவாக்க முனையும் செயலாகும் என பத்துமலை கோயில் விவகாரத்தில் ஆகம அணியை எதிர்த்து வரும் தமிழ்ப்புகழ் குணசேகரன் (தமிழர் களம்) அவர்கள் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் அவர்களின் வீட்டில் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரனை நடத்தியும், அது தொடர்பாக தேவஸ்தான தலைவர் உட்பட மூவரை மூன்று நாள் தடுப்பு காவலில் வைத்திருப்பதும் ஊடகங்கள் வாயிலாக அனைவரும் அறிந்திருக்கும் செய்திதான்.

ஆனாலும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் முன்னரே, ஆகம அணி கும்பல் கொக்கரித்துக் கொண்டிருப்பது, நாம் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டினை மெய்ப்பிக்கும் வகையாகவே அமைந்துள்ளது. அதாவது பத்துமலை கோயில் நிர்வாகத்தை எப்படியும் களவாடிவிடலாம் என்ற எண்ணத்துடன் கடந்த ஆண்டில் நிர்வாக தலைவரை மாற்ற வேண்டும் என்று கபட நாடகம் ஆடிய ஆகம அணி கும்பல், தம்போது நேரடியாக ஒட்டுமொத்தமாக நிர்வாக குழுவினர் அனைவரையும் வெளியேற்ற துடிப்பதை நேற்று 6.3.2019 நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிந்தோ அறியாமலோ ஆகம அணி அம்பலப்படுத்திக் கொண்டது.

எனவேதான் தமிழர்கள் நாங்கள் இதுபோன்ற நயவஞ்சக கூட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றோம். இவர்கள் பேச்சு ஒன்றும் நோக்கம் ஒன்றாகவும் இருப்பதை மலேசியத் தமிழர்கள் அறிந்து தெளிந்து கொள்வது தமிழர் இனத்திற்கு விழிப்பையும் பாதுகாப்பையும் தருமென தமிழ்ப்புகழ் தெரிவித்தார்.

தடுப்பு காவலில் இருக்கும் அம்மூவரும் குற்றவாளிகளா, இல்லையா என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் மலேசிய நாட்டின் நீதி நிலைநாட்டப்படும் எம்பதில் ஆகம அணி கும்பலுக்கு ஏதும் ஐயமிருக்குமோ என்னவோ, நாட்டின் சட்ட நீதியைவிட இவர்கள் போடும் சத்தம் பெருநீதி என்ற மயக்கத்தில் திரிகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்குவதும், நிரூபிக்கப்படவில்லை என்றால் விடுவிப்பதும் நீதிமன்றம் பார்த்து கொள்ளும்.

இதுதான் வாய்ப்பென தடியெடுத்தவர் போல் ஆடுவதை ஆகம அணி நிறுத்திக்கொள்வது நலம். கடந்த ஆண்டில் 50ஆயிரம் பேர் 1லட்சம் பேர் பேரணி என்று உங்கள் முகத்தில் நீங்களே சாணம் பூசிக் கொண்டது ஆகம அணிக்கு மறந்து விட்டத்தா என தமிழ்ப்புகழ் கிண்டலுடன் கேள்வி எழுப்பினார்.

மக்களுக்கு ஒன்றை மட்டும் தான் சொல்ல முடியும், மெய்ப்பொருள் காணுங்கள். தான்தோன்றித்தனமாக இருந்தால், ஆகம அணி போன்ற இன்னும் பல கும்பல் உருவாகி, நீதிக்கான போராட்டம் எனச் சொல்லி நிர்வான கோலத்தில் வீதியில் நிறுத்திவிடுவார்கள். எந்த செய்தியை கண்டாலும் கேட்டாலும் அது உண்மை என்று முடிவெடுக்காமல், பகுத்தாய்ந்து செயல்படுங்கள் என்றார் அவர்.

மேலும் தமிழர்கள் நாங்கள் மீண்டும் மீண்டும் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்கின்றோம். வழிபடும் உரிமை அனைவருக்கும் உண்டு, ஆனால் எங்களின் உரிய உடமைகளை வழிநடத்தும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. அருண் டோராசாமியின் ஆகம அணியெனும் மதத் தீவிரவாத கும்பலுக்கும், அதற்கு துணை நிற்கும் அற்ப புத்திக்காரர்களுக்கும், இறுதி எச்சரிக்கை விடுக்கின்றோம். எப்படியும் பத்துமலை கோயிலை தமிழர்களிடமிருந்து களவாடிவிடலாம் எனும் உங்கள் சிந்தையை சீர்திருத்திக் கொள்ளுங்கள். தமிழர்கள் நாங்கள் அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும், எவர் உரிமைக்கும் உடமைக்கும் ஆசை கொள்ளாது, அவரவர் உரிமை உடமையுடன் ஒற்றுமையாய் வாழவே விரும்புகின்றோம். இதை புரிந்து நடந்து கொண்டு நடப்பதே, நம் அனைவருக்கும் நலம்.

இந்த சர்ச்சையில் எங்கள் வாதத்திலும் போராட்டத்திலும் உண்மையும் நேர்மையும் இருக்கிறது, அதுவே அறம் என்று எங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருந்துவரும் தெலுங்கு, மலையாள, சீக்கிய மற்றும் இன்னும் பிற சகோதர இனத்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, மலேசிய தெலுங்கு சங்கம், மலையாள சங்கம் மற்றும் பிற இனத்தவர்களில் சங்கப் பிரதிநிதிகள் தமிழர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பாக நின்று, இந்திய வம்சாவளியின் பல்லின மக்களிடையே பகையைத் தூண்டும் ஆகம அணியை கண்டிக்க வேண்டும் என்றும் தமிழ்ப்புகழ் குணசேகரன் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version