லண்டன், மார்ச் 8-
அகில இங்கிலாந்து பேட்மின்டன் போட்டியில் மலேசியாவின் இரட்டையர் ஆட்டக்காரர்களான வீ செம் – வீ கீயோங் ஜோடி காலிறுதி ஆட்டத்ததிற்கு தகுதி பெற்றனர்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-18, 21-19 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகி எண்டோ-யுதா வாதனபே ஜோடியை தோற்கடித்து காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்த மலேசிய ஜோடி எதிர்பார்க்கப்பட்டதை விட எளிதாக ஜப்பானிய ஆட்டக்காரர்களை வீழ்த்தினர்.
கோ வி சிம்- வீ கியோங் ஜோடி இன்று இரவு நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் பஜார் ஆசியான் – முகமட் ரியான் ஆர்டியோன் இனணயை சந்திப்பார்கள் . அவர்கள் 13 -21, 21 -19, 23-21 என்ற புள்ளி கணக்கில் சீனா விளையாட்டு வீரர்களை வீழ்த்தினர்.

