ஈப்போ மார்ச் 8-
பேரா மாநிலத்தில் கார்னிவெல் பெயரில் அங்காங்கே நடத்தப்பட்டு வரும் வாணிபத்தால் நிரந்த வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வாணிபத்தில் ஈடுபட்டு வருவது பெரும்பாலனவர்கள அந்நிய நாட்டு வணிகர்கள். அவர்களின் நடவடிக்கையால் உள் நாட்டு வணிகர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறார்கள். இதனால் வர்த்தக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வணிகர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் லிட்டில் இந்திய வளாகத்தில் பலர் கடைகளை மூடி வருகிறார்கள் .
கடந்த 10 ஆண்டுகாலமாக இந்த பாதிப்பை ஏதிர்நோக்கி வருகிறார்கள் . இதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று லிட்டில் இந்திய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கலா பாலசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
உள் நாட்டு வணிகர்கள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி செலுத்தி சட்டப் பூர்வமான முறையில் வாணிபத்தை வழி நடத்தி வரும் எங்களுக்கு பாதிப்பை ஏற் படுத்தி வரும் அந்நிய நாட்டு வணிகர்களை கண்காணிக்க குடிநுழைவுத் துறை இலாகா மற்றும் ஊராட்சி மன்றங்கள கண்காணிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வெள்ளிக்கிழமை லிட்டில் இந்திய வணிகர் கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை வலியுறுத்திய அவர் இதில் கலந்துக்கொண்ட உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட்டிடம் வணிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன் வைத்தார்.
இது குறித்து கருத்துரைத்த முகமட் அராப்பாட் , இந்த விவகாரத்தை மாநில அரசாங்க கவனத்திற்கு கொண்டுச் சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

