கோலாலம்பூர், மார்ச் 8-
டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோரை தேசிய முன்னணி தலைமைச் செயலாளராகத் தொடர்ந்து நீடிக்கச் செய்வதென எடுக்கப்பட்ட முடிவில் தனக்கு வருத்தம் ஏதும் இல்லையென டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் கூறினார்.
இதன் வழி தான் இப்போது சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்கலாம் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரான நஸ்ரி தெரிவித்தார்.
“நான் சுதந்திரமான ஓர் அரசியல்வாதி என்பதால் இனி கருத்துகளை எளிதாக வெளியிடலாம் ” என்றார் நஸ்ரி.
தேசிய முன்னணியில் பதவி வகிக்கும்போது சுதந்திரமாக கருத்துகளை வெளியிட முடியாது. குறிப்பிட்ட சில விவகாரங்களில் நான் பிடிவாதப் போக்கோ அல்லது போராட்ட குணமோ கொண்டவன் அல்ல” என்று அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில், டிவிஷன் உள்பட கட்சியின் அனைத்து நிலைகள் மற்றும் பொதுத் தேர்தல்களிலும் தான் வெற்றி பெற்றிருப்பதால் யார் மீதும் தனக்கு பகைமை உணர்வு கிடையாது என்றும் நஸ்ரி விவரித்தார்.

