Site icon அநேகன்

பெர்லிஸ் மாநிலத்தில் கூட்டணி அரசாங்கம் -மந்திரி புசார் அஸ்லான் மான்

கோலாலம்பூர், மார்ச் 10-

பெர்லிஸ் மாநிலத்தில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  முகமட் ஹசான் கூறியிருக்கும்  ஆலோசனைக்கு அம்மாநில மந்திரி புசார் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை ஆக்கபூர்வமானதாக இருப்பதால் தாம் இதனை தீவிரமாக பரிசீலிக்க இருப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மான் கூறினார்.

அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கு இடையே ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஆலோசனை விவேகமானதாக இருந்தால்  பெர்லிஸ்  மாநிலத்தில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதை  தாம் வரவேற்பதாக அஸ்லான் தெரிவித்தார்.

பெர்லிஸ் மாநிலத்தில் கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதற்கும் அம்மாநிலத்தை சேர்ந்த அம்னோவின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர்.

தற்போது பாஸ் மற்றும் அம்னோ தலைமையிலான  நான்கு மாநில நிர்வாகங்களில் கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்படலாம் என டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறியிருந்தார்.

Exit mobile version