Site icon அநேகன்

ஆபத்து அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு புது கண்டுப்பிடிப்புகள்; சிவநேசன் பாராட்டு

ஈப்போ, மார்ச் 12-

உலக சுகாதார வளர்ச்சிக்கு ஏற்ப மருத்துவ துறையில் அதன் புதிய விஷயங்களைத் தெரிந்துக் கொண்டு செயலாற்றும் அவசியத்தை  மாநில சுகாதார பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள அதன் ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வலியுறுத்தினார்.

அந்த வகையில் நாட்டின் சுகாதார மாற்றங்களைத் தெரிந்துக்கொள்ளவும் அதன் புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து அவசர ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற இங்கு நடத்தப்பட்ட கருத்தரங்கை அவர் வரவேற்றார்.

இங்குள்ள மேரு கேசுவரினாவில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு தேசிய நிலையில் நான்காவது முறையாக நடத்தப்படுகிறது.

சுமார் 600 பேராளர்கள கலந்துக்கொண்ட அதில் அதன் பேச்சாளர்கள் பல வெளி நாடுகளிருந்தும் வருகை புரிந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதுபோன்ற கருத்தரங்கு தொடர்ந்து நடத்தப்படவேண்டும் அதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கின் வழி மருத்துவ தொடர்புடைய பல விஷயங்களைத் தெரிந்துக்கொண்டு மேலும் சிறந்த சேவையை வழங்கிட வழி வகுக்கிறது என்று இந்த கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தம் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

Exit mobile version