ஈப்போ, மார்ச் 13-
இங்கு நடைபெற்ற மகளிர் தின விழாவில் சமுக சேவகி முனைவர் தி.ராமநாயகத்திற்கு ” உலக இணையற்ற சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் மற்றும் சமுக இயக்கங்களின் வழி தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்னமும் சேவையாற்றி வருகிறார்.
அவரின் சேவையை பாராட்டு ஊக்குவிக்கும் வகையில் இந்த கௌரவிப்பை மலேசிய மகளிர் இயக்க நிர்வாக உறுப்பினர்கள் செய்தனர்.
இந்த நிகழ்வில் ராமநாகத்தின் சேவைக் குறித்து சுங்கை சிப்புட் பிரமுகர் அமுசு.ஏகாம்பரம் புகழாரம் சூட்டினார்.
இங்குள்ள பெஸ்மி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏற்புரை வழங்கிய ராமநாயகம் நாட்டின் எதிர்கால சூழ்நிலைகளை அறிந்து செயல்படவேண்டும் என்று மகளிர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

