Site icon அநேகன்

உணவகங்களில் புகைப்பிடிக்க தடை ; 30 விழுக்காடு வாடிக்கையாளர்களை இழந்து விட்டோம்- நூரூல் ஹசான்

கோலாலம்பூர், மார்ச்.15-

ஜனவரி ஒன்றாம் தேதி தொடக்கம் உணவகங்களில் புகைப்பிடிக்க சுகாதார அமைச்சு தடை விதித்ததைத் தொடர்ந்து 30 விழுக்காடு வாடிக்கையாளர்களை இழந்து விட்டதாக அமானா கட்சியின் இந்திய முஸ்லீம் பிரிவு தலைவர் நூரூல் ஹசான் கூறினார்.அரசாங்கம் ஏதேனும் திட்டத்தை முன்னெடுக்கும் போது அதற்கான அடிப்படை நடவடிக்கைகளை முதலில் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரிலும் உணவகங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகங்களில் புகை பிடிப்பவர்களுக்கு பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மலேசியாவின் கலாச்சாரம் என்ன என்பதை நாம் உணர வேண்டும். உணவகம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு தலமாக விளங்குகின்றது. ஓய்வு நேரத்தில் டி அருந்திவிட்டு புகை பிடிப்பதற்கு ஆகவே சிலர் உணவகத்திற்கு வருகின்றார்கள். இப்போது அந்த சூழ்நிலை இல்லை என்பதால் பலர் உணவகங்களுக்கு வருவதே இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அமானா கட்சியிலுள்ள இந்திய முஸ்லிம் தலைவர்களுடன் அதன் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். மலேசியாவில் உள்ள இந்திய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர் மட்டத்தில் உள்ள தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சந்திப்பு கூட்டம் நடத்தப் பட்டதாகவும் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை பொருத்தவரை மக்கள் எந்த பிரச்சினை குறித்து யோசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆவலாக இருக்கிறார்கள். அதோடு தங்களின் தலைமைக்கு குறித்து மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் சிந்தித்து பார்க்கின்றார்கள்.

நாடு மிகப்பெரிய பண நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது என்ற காரணத்தைக் கொண்டு குத்தி வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தடுமாறி வருகின்றது. இது குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் கூறப்பட்ட தையும் அவர் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் கூறினார்.இந்த சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தற்காப்பு அமைச்சர் மாட் சாபு கலந்து கொண்டார். அவருடன் விவசாயம் விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சர் சலாஹுதீன் அய்யூபி பங்கேற்றார்.

Exit mobile version