Site icon அநேகன்

டத்தோ ஆர்.எஸ் மணியம் காலமானார்!

கிள்ளான், ஜூலை 25-

மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டத்தோ ஆர்.எஸ் மணியம் காலமானார். நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் காலமானதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

மஇகாவின் மாநில தலைவராக பொறுப்பேற்று இருந்த டத்தோ ஆர்.எஸ் மணியம், அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினராகவும் பணியாற்றி வந்துள்ளார். கோத்தா ராஜா தொகுதியின் தலைவருமான அவர் அவ்வட்டார பொது மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

பொதுச் சேவைகளில் தம்மைத் தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு மக்களின் நலத் திட்டங்களை முன்னெடுத்து அவர் திடீர் மரணம் அடைந்திருப்பது மஇகா மட்டுமின்றி அனைவரையும் வெகுவாக பாதித்திருக்கிறது. மேல் விவரங்கள் பின்னர் இடம்பெறும்.

Exit mobile version