கோலாலம்பூர் , ஜுலலை 29-
கியூஐ குழுமத்தின் மனித வளம் மற்றும் நிர்வாகத்தின் இயக்குனர் போய் கோ அவர்களுக்கு அடையாள சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. .செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது IPEC உலகளாவிய சாதனைக்கான 2019 அங்கீகார விழாவில் அவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
சபா துணை முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஸ்ரீ வில்பிரேட் மடியஸ் தங்காவ் இந்த விருதை வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தனிப்பட்டவர்களுக்கு டத்தோஸ்ரீ வில்பிரேட் இந்த விருதை வழங்கி சிறப்பித்தார். கியூஐ மலேசிய வர்த்கத்திற்கான தலைமை செயல் அதிகாரியுமான போய் அவர்களுக்கு அவரது பரவலான சமூக பணிகள், தொழில்துறை மற்றும் மனித அதிகாரத்தில் ஆற்றிய தீவிர பங்கை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
அவரது தலைமைத்துவத்தின் கீழ் கியூஐ குழுமம் மலேசியாவில் வசதிக்குறைந்த உள்ளூர் சமுகத்திற்குஉதவும் வகையில் பல்வேறு சமுக மேம்பாட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளது. இதுவரை கியூஐ குழுமத்தின்பணியாளர்களுக்கான தன்னார்வத் திட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
மலேசியாவிலுள்ள கியூஐ பணியாளர்கள் தங்களுக்கான தன்னார்வத் திட்டங்களுக்காக 10,000 மணி நேரத்துக்கும் கூடுதலாக சேவை செய்துள்ளார். உலக தொழில் முனைவர்கள் வர்த்தக தலைவர்கள் தொழில் சமூக கடப்பாட்டை கடப்பாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சிறந்த விளையாட்டாளர்கள் ஆகியோர்களின் சாதனைகளை அங்கீகரித்து IPEC சாதனை விருதை வழங்கியது.
உலகின் முன்னணி விளையாட்டாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் இந்த விருதளிப்பு வைபவம் அமைந்தது.உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான டத்தோ நிக்கோல் டேவிட் உலகின் முன்னாள் முதல்நிலை பேட்மின்டன் விளையாட்டு வீரரான டத்தோ லீ சொங் வெய் உட்பட பலர் இந்த அடையாள சாதனையாளர் விருதை பெற்றனர்.
எங்களது அமைப்பாளர்களின் ரிதம் தத்துவ அணுகுமுஞறைக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றனர் என போய் கூ தெரிவித்தார். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான் ரிதம் அணுகுமுறையின் தத்துவம். நிறுவனத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் கடந்த 20 ஆண்டு காலமாக இந்த பாதைதான் எனக்கு வழிகாட்டியாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக நான் ஆற்றிய பங்கிற்காக எனக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவம் என்னை நெகிழச் செய்துள்ளது. நீடித்த எதிர்காலத்திற்கான கியூஜ குழுமத்திற்கு கிடைக்கப்பெற்ற மற்றொரு அங்கீகாரம் இதுவாகும் என கூய் தெரிவித்தார்.
கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கிடைக்கப்பெற்ற அனைத்து நியமனங்களையும் IPEC விருதளிப்பு குழு தீவிரமாக மதிப்பீடு செய்தது. பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜேலஸ் யோ, டத்தோ நாதன் கே. சுப்பையா மற்றும் டத்தோ அஸ்மில் ஹாஜி மாமார் ஆகியோர் இந்த விருதளிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
முன்னுரிமை, தொலைநோக்கு, அடையாளம் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. தொலைநோக்கு விருதை அனைத்துலக அங்கீகார சங்கத்தின் பேராசிரியர்.இங் வீ கியோங் பெற்றார்.

