பேங்காக், ஆக 4-
இவ்வாண்டுக்கான ஆசிய ஸ்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஃப்ரீஸ்டைல் பிரிவில் மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ அபிராமி (வயது 7) தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய ஸ்கேட் சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைப்பெறும் இப்போட்டியில் தாய்லாந்து, சீனா, ஹாங் காங் நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் அதிகமான புள்ளிகளை பெற்று நாட்டிற்கு பெருமை தேடி தந்துள்ளார் அபிராமி.
இந்நிலையில், இப்போட்டிக்கான இரண்டாவது இறுதிச்சுற்று நாளை நடைப்பெறவுள்ளது. ஸ்கெட்டிங் போட்டியில் பல தங்கங்களை வென்ற ஸ்ரீ அபிராமி இதிலும் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீ அபிராமி மேலும் பல தங்கங்களை குவித்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அநேகன் இணையத்தளம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

