கோலாலம்பூர், ஆக 7-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வரலக்ஷ்மி விரதத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை ( 09/08/2019 ) திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணமான சுமங்களிப் பெண்களும் திருமணமாகாத குமரிப் பெண்களும் திருவிளக்கு பூஜையில் கலந்துக்கொள்ள வரவேற்கப்படுகின்றநர். முதலில் பதிவு செய்யும் 108 பக்தர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும்.
பங்கேற்பாளர்கள் எடுத்து வர வேண்டிய பொருட்கள்; குத்துவிளக்கு 1, தட்டுகள், தீர்த்த கிண்ணம், தலை வாழை இலை, உதிரிப்பூக்கள் மற்றும் மல்லிகைச் சரம் 3 முழம். பங்கேற்பாளர்கள் RM 10.00 கட்டணம் செலுத்தி ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு கோயிலின் சார்பில் ; அரிசி, அகல் விளக்கு, விளக்குத் திரி, மஞ்சள், பூஜை எண்ணெய் மற்றும் பூஜைக்குத் தேவையான இதர பொருட்கள் வழங்கப்படும்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைமை குருக்கள் ஸ்ரீ சிவக்குமார் பட்டர் அவர்கள் இந்தத் திருவிளக்கு பூஜையை முன்னின்று நடத்துவார். வழக்கம்போல் மாலை மணி 4.30 -க்கு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மாலை மணி 5.30 அளவில் நித்திய பூஜையும், 7.00 மணி அளவில் திருவிளக்கு பூஜை ஆரம்பமாகும்.
அதன் பிறகு சிறப்பு வழிபாட்டிற்குப் பின் தீபாராதனையும் விபூதி பிரசாதமும் வழங்கப்படும். ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் சமயப் பிரிவின் கீழ் நடைபெறும் இந்த திருவிளக்கு பூஜையின் பொறுப்பாளர் தேவஸ்தானத்தின் அறங்காவலர் திரு. கதிரேசன் ஆவார். இது குறித்த மேல் விபரங்களுக்கு பின் வரும் எண்களில் தேவஸ்தானத்தை தொடர்புக்கொள்ளவும். 03-2078 5323

