Site icon அநேகன்

காராக் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய புதிய ரத வெள்ளோட்டம்!!

காராக் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தின் புதிய ரத வெள்ளோட்டம் வரும் 10.8.2019ல் (சனி) நடைபெறவுள்ளது. ஆலய பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்வில் திரளாக வருகை தந்து கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய ரதம் காராக் பிரதான சாலையில் மட்டும் வலம் வரும். அந்த வெள்ளோட்ட நிகழ்வின் போது இந்திய பாரம்பரிய நடனங்களும் பக்தி பாடல்களும் உடன் இடம் பெறும்.

இந்த ரதத்தை ஆலயத்தின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமாகிய அமரர் திரு. வீ. சின்னு அவர்களின் தம்பியாகிய திரு. வீ.முத்துசாமி குடும்பத்தார் (ஸ்ரீ எம்.எஸ். மேம்பாட்டு நிறுவனம்) நன்கொடை வழங்கியுள்ளார்.

இதனை முன்னிட்டு 9.8.2019 (வெள்ளி) மாலை 5.00 மணி முதல் ஆலயத்தில் பல சிறப்புப் பூஜைகளும் இதர நிகழ்வுகளும் இடம் பெறவுள்ளன.

இந்நிகழ்வு தொடர்பான விபரங்களை ஆலயத் தலைவர் திரு. எஸ்.சிவலிங்கம் (012-9625992), செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயேந்திரன் (016-3229292), பொருளாளர் திரு.எஸ்.யோகநாதன் (016-9256015) ஆகிய பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டு பொது மக்கள் தகவல் பெற்றுக் கொள்ளலாம்.

Exit mobile version