புத்ராஜெயா, ஆக.9 –
ஏவுகணை புகழ் இயந்திர பொறியியல் முதுகலை பட்டதாரி மாணவர் விஷானையும் அவரின் பெற்றோரையும் பிரதமர் துறை அமைச்சர் பாராட்டியும் சிறப்பித்தும் மகிழ்ந்தார்.
சிறுவயது முதலே தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்டிருந்த விஷான், இங்கிலாந்து ஷெஃப்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் முதுகலைப்பட்டக் கல்வியை மேற்கொண்டு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் நாள் பட்டம் பெற்றார்.
ஷெஃப்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது புறப்பட நடவடிக்கை மூலம் நோவா ரக ஏவுகணையைத் தாயரித்த பன்னாட்டு மாணவர் குழுவிற்கு தலைமையேற்று மலேசியப் பெருமையை நிலைநாட்டிய விஷான், தன் பெற்றோரான இரா.பிரகாசம்-அ.நிர்மலா இணையருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தொடர்ந்து இதேத் துறையில் முனைவர் பட்டம் பெற இருக்கும் விஷானை, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவருமான பொன்.வேதமூர்த்தி பாராட்டினார்.

