கோலாலம்பூர், ஆக 15-
இன்று பெய்த கனத்த மழையால் சில தலைநகரின் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. மாலை மணி 5.00 தொடங்கி பெய்த கனத்த மழையில் தலைநகரிலுள்ள முக்கிய கால்வாய்களில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது.
அதோடு, முக்கியமான சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட தொடங்கியது. நீரில் அளவு அதிகரித்ததால் கார்கள் சாலையில் செல்ல முடியவில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

