Site icon அநேகன்

நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஜாகிர் நாய்க்கின் நிரந்தர குடியிருப்பு தகுதி மீட்டுக்கொள்ளப்படும் –டாக்டர் மகாதீர் திட்டவட்டம்

கோலாலம்பூர், ஆக 16-

சர்ச்சைக்குரிய சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க் நாட்டின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தால் அவரது நிரந்தர குடியிருப்பு தகுதியை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

இன்று ஏர் ஆசியா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜாகிர் நாய்க்கை பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவர் தவறு செய்திருந்தால் நிரந்தர குடியிருப்பு தகுதி நிச்சயம் மீட்டுக்கொள்ளப்படும். மேலும், இனங்களுக்கிடையே குழப்பதை ஏற்படுத்தக்கூடிய உரைகளை தொடர்ந்து உரையாற்றினால் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் மகாதீர் கூறினார்.

இதனிடையே, விளக்கம் கூறுவதற்காக ஜாகிர் நாய்க்கை போலீஸ் அழைத்திருப்பதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

Exit mobile version