Site icon அநேகன்

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்டு 23 – ஆம் திகதி ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும். இந்த உற்சவத்தை நமது கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் விமரிசையாய் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த உற்சவம் மதியம் 12.00 மணியளவில் அன்னதானத்துடன் துவங்கவுள்ளது. மாலை 7.00 மணியளவில் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைச் சித்தரிக்கும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறும். அதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சிறப்புப் பூஜையும், பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும்.

தீபாராதனை, காளாஞ்சி பிரசாதத்துடன் இரவு உணவும் பக்தர்களுக்கு வழங்கப்படும். தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா, அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் பக்தர்கள் அனைவரையும் புனிதமான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தில் கலந்துக்கொண்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியைப் பெற்றுப் பயணடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றனர்.

Exit mobile version