கோலாலம்பூர், ஆகஸ்ட் 20-
தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி ஓவிய எழுத்து அறிமுகப் படுத்துவதைப் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் பெற்றோர்களும் முழுமையான எதிற்பு கண்டனக் குரல் எழுப்பும் வண்ணம் தத் தம் பள்ளிகளில் பதாகைகளைத் தொங்கவிட வேண்டுமென்று சிலாங்கூர் மாநில ஒட்டு மொத்த இந்திய சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்று சிலாங்கூர் இந்திய சமூகத் இயக்கத் தலைவர் இராசேந்திரன் இராசப்பன் தெரித்தார்.
அது மட்டுமல்லாமல் நமது தமிழ்ப்பள்ளி, நமது தாய் மொழி, நமது பிள்ளைகள் நாம் தான் பொருப்பானவர்கள் என்று அனைத்து 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் உணர்ந்து உரிமையுடனும் பொருப்புடனும் அந்த அந்தப் பள்ளிகளின் வளாகத்தில் பதாகைகளை அனைத்துப் பள்ளிகளிலும் தொங்க விட வேண்டும்என்பதனை இந்திய சமூக இயக்கத்தின் துணைத் தலைவரான குமரவேல் கூறினார்.
பெற்றோர்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் தாண்டி ஜாவி ஓவிய எழுத்துத் தமிழ்ப்பள்ளிகளில் ஒருபோதும் நுழையாது என்பதனை ஆணித்தரமாகக் கூறுனார் இந்திய சமூக இயக்கச் செயலாளர் கண்மனி.
மேலும் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உடனே ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றும், அக்கூட்டத்தில் பெற்றோர்கள் அனைவரும் ஜாவி ஓவிய எழுத்துத் தங்கள் பள்ளிக்கு வேண்டாம் என்ற ஒட்டு மொத்த குரலைத் தீர்மானமாகப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வருடமும் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டுக்கூட்டத்தில் ஒட்டுமொத்தக் குரலுடன் தீர்க்கமான முடிவாக , எந்தக் காலகட்டத்திலும் எந்த நிலையிலும் எங்கள் தமிழ்ப்பள்ளிக்கு ஜாவி ஓவிய எழுத்து வேண்டாம் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முதல் தீர்மானமாகக் கொண்டுவரவேண்டும் என்றும் அறம் இயக்கத் தலைவரும் இந்திய சமூக இயக்க தகவல் பிரிவு தலைவருமான நடேசன் வரதன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஜாவி ஓவிய எழுத்தை தமிழ்ப்பள்ளிகளில் முற்றாக ஒழிக்கும் வரையில் இந்த நகர்வை மலேசியாவில் உள்ள அனைத்து 524 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று இந்திய சமூக இயக்க மகளிர் தலைவி தேவி கூறினார்.

