கோலாலம்பூர், ஆகஸ்ட் 20-
மலேசியாவில் பழமையான நாளேடுகளில் ஒன்றான உத்துசான் மலேசியா மற்றும் அந்நிறுவனத்திற்குச் சொந்தமான கோஸ்மோ ஆகிய நாளேடுகள் மூடப்படுவதாக நேற்று முதல் செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் அந்த இரண்டு நாளிதழ்களும் நிறுத்தப்படாது என உத்துசான் மலேசியா குழுமத்த்தின் தலைமை நிர்வாகி அப்துல் அசிஸ் ஷேக் பட்சின் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த இரண்டு நாளேடுகளின் விலையும் உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி அந்த இரண்டு நாளிதழ்களும் நடப்பு விலையிலிருந்து 50 காசு உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். உத்துசான் மலேசியா 2 வெள்ளியும் கோஸ்மோ 1 வெள்ளி 50 காசும் விற்கப்படவுள்ளது.
உத்துசான் மலேசியாவை வர்த்தக நாளிதழாக உருமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் முடக்கிவிடப்படுமெனக் கூறிய அவர், நம்பிக்கை கூட்டணியின் தலைவர்கள் குறித்த செய்திகளை வெளியிட்டதன் காரணமாக உத்துசான் மலேசியா நீதிமன்ற அபராதங்களைப் பெற்றது இந்தப் பின்னடைவுக்குக் காரணமென முன்னாள் பண்டார் பாரு கூலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல் அசிஸ் ஷேக் தெரிவித்தார்.
இந்நிலையில் தாம் பொதுமக்களின் உதவியைப் பெரிதும் நாடுவதாகவும் இன்று உத்துசான் மலேசியா தலைமையகத்தின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வர்த்தகர்கள் உத்துசான் மலேசியாவில் விளம்பரம் செய்ய வேண்டுமென்ற அழைப்பையும் அவர் வெளியிட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் சொற்பொழிவு மூலம் தீவிரவாதத்தைத் தூண்டியதாக ஜாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் 2016 ஆம் ஆண்டு முதல் அவரை இந்திய அரசாங்கம் தேடி வருகிறது.
அண்மையில் கோத்தா பாருவில் அவர் மலேசிய இந்துக்கள் மற்றும் , சீனர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றிய கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தச் சர்ச்சைக்குரிய சமய போதகரை நாட்டிலிருந்து வெளியேற்றும்படி கோரிக்கை அதிகரித்தது.

