Site icon அநேகன்

மலேசியா-தாய்லாந்து மோதும் இறுதி ஆட்டத்திற்கு ஷா ஆலம் அரங்கு தேர்வு!

கோலாலம்பூர், ஆக.27-
வருகின்ற செவ்வாய்கிழமை மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையில் நடைபெறவிருக்கும் சீ கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு ஷா ஆலம் அரங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ லொக்மான் ஹக்கிம் அலியின் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு பின்னர் மலேசிய கால்பந்து சங்கம் (எப்.ஏ.எம்) தனது அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

அந்த அறிக்கையில் மலேசியா இடையிலான இறுதி ஆட்டத்தின் டிக்கட் விலை 21.20ஆக (ஜி.எஸ்.டி. சேர்த்து) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆட்ட இரவு மணி 8.45க்கு நடைபெறும்.

அரையிறுதி சுற்றில் மலேசியா 1 0 என்ற கோல் கணக்கில் இந்தோனிசியாவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேவேளையில், தாய்லாந்து அணியும் மியான்மாரை 1 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. தங்கம் மற்றும் வெள்ளியை நிர்ணயிக்கும் ஆட்டமாக இது விளங்குகின்றது.

வெண்கல பதக்கத்தை நிர்ணயிக்கக்கூடிய இந்தோனிசியா மியான்மார் இடையிலான ஆட்டம் அதேநாளில் மாலை மணி 4.30க்கு செலாயாங் நகராண்மை கழகத்தின் அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version