Site icon அநேகன்

2017  சீ விளையாட்டுப் போட்டி –  வாகை சூடியது மலேசியா!

கோலாலம்பூர், ஆக.28-

2017 சீ விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியிருக்கும் வேளையில் இந்தப் போட்டியின் ஒட்டு மொத்த  வெற்றியாளராக மலேசியா வாகை சூடியுள்ளது . திங்கட்கிழமை நண்பகல் 12 .30 மணி அளவில் 100 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றதன் வழி 2017 சீ விளையாட்டுப் போட்டியின் ஒட்டு மொத்த வெற்றியாளர் என்ற பட்டத்தை மலேசியா உறுதி செய்துள்ளது.

பதக்கப் பட்டியலில் இதர நாடுகள் மலேசியாவைக் காட்டிலும் பின் தங்கியிருப்பதால் மலேசியாவின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டுள்ளது.எனினும் மலேசியாவின் இலக்கு 111 தங்கப் பதக்கங்கள் என்ற பட்சத்தில் எந்த விளையாட்டில் இருந்து அந்த 111ஆவது தங்கம் கிடைக்கும் என்பது மிகப் பெரிய கேள்வி குறியாகி இருக்கிறது.

டைவிங், பாய்மர படகு, ஸ்குவாஷ், ஹோக்கி, சைக்கிளோட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளை இன்று தொடங்கி நடைபெறவிருப்பதால் நிச்சயம் இந்த விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து மலேசியாவுக்கான 111 ஆவது தங்கம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version