லண்டன், ஆக.29 –
அர்செனல் கால்பந்து கிளப்பின் மத்திய திடல் ஆட்டக்காரர் அலெக்ச்ஸ் ஒக்ஸ்லேட் சாம்பேர்லேன், செல்சியில் இணையவிருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
24 வயதுடைய சாம்பேர்லேனைப் பெறுவது தொடர்பில் அர்செனல், செல்சி கிளப்புகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டதாக ஈ.எஸ்.பி.என்., தி கார்டியன், தி இண்டிபென்டன் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.
3 கோடியே 50 லட்சம் ஈரோ டாலரில் சாம்பேர்லேனை வாங்க செல்சி இணக்கம் தெரிவித்துள்ளடஹக கூறப்படுகிறது. ஒக்ஸ்லேட் சாம்பேர்லேன் அர்செனல் கிளப்பில் தொடர்ந்து விளையாட வேண்டும் என அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கர் எண்ணம் கொண்டுள்ளார்.
ஆனால் அர்செனலின் முதன்மை அணியில் தமக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அணி மாற சாம்பேர்லென் தயாராக இருக்கிறார்.
