Site icon அநேகன்

பிரதமரை சந்தித்தார் டான்ஸ்ரீ காலிட்

கோலாலம்பூர், ஆக.29 

செப்டம்பர் 5 ஆம் தேதி பணிஓய்வு பெறும் தேசிய போலீஸ்படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் மரியாதை நிமித்தம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை இன்று புத்ரா ஜெயா சென்று அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

காலிட், 40 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிவிட்டு  ஓய்வு பெறுகிறார். ஒப்பந்த ஊழியராக அவரது பணிக்காலத்தை நீட்டிக்க அவர் விரும்பவில்லை.

அவர், 1976-இல் முதன்முதலாக போலீசில் சேர்ந்தார். அதன் பின்னர் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகியவற்றின் தலைமை போலீஸ் அதிகாரி, புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குனர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

2010-இல் புக்கிட் அமானில் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு இயக்குனராகவும் 2011-இல் தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவராகவும்  நியமிக்கப்பட்டார்.

சிரம்பானில் பிறந்தவரான காலிட், 2013, மே 17-இல் டான் ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் பணிஓய்வு பெற்ற பின்னர் தேசிய போலீஸ் படைத் தலைவர் பொறுப்பை ஏற்றார்

Exit mobile version