Site icon அநேகன்

கோவிட் 19 : இன்று 217 சம்பவங்கள் பதிவு மரண எண்ணிக்கை 53ஆக உயர்ந்தது! 60 பேர் குணமடைந்தனர்!

கோலாலம்பூர், ஏப். 3-

மலேசியாவில் இன்று 217 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 108 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள்.

இன்று புதிதாக 3 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று 60 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 827ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version