லண்டன், ஏப். 7-
கோவிட் 19 நோய் தொற்றுக்கு முன்னதாக இளவரசர் சார்லஸ் இத்தொற்றுக்கு ஆளானார். சிகிச்சைக்கு பிறகு தற்போது குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் 55 வயதுமிக்க பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கோவிட்-19 தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக பிரதமர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் அவர், கூடுதல் பரிசோதனைகளுக்காகவும் சிகிச்சைக்காகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட்-19 உடன் போராடி வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வேண்டும் என அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

