புத்ராஜெயா, ஏப் 8-
மலேசியாவில் இன்று 156 கோவிட் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.
இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,119 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,567 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனிடையே அவசர சிகிச்சை பிரிவில் 76 பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 46 பேர் செயற்கை சுவாச கருவியின் உதவியை நாடியுள்ளார்கள். இன்று புதிதாக 2 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 166 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,487ஆக அதிகரித்துள்ளது. இது 36.1 விடுக்காடு ஆகும்

