Site icon அநேகன்

கோவிட் 19 குறித்த விரிவான தகவல் பெற புதிய செயலி!

கோலாலம்பூர், ஏப். 10

மலேசிய ஆயுதப் படையும் தேசியப் பாதுகாப்பு மன்றமும் கோவிட்-19 குறித்த விரிவானத் தகவல்களைப் பெற உதவும் வகையில் எரிசக்தி, இயற்கைவள அமைச்சு DASHBORAD செயலி WebGIS ஐ உருவாக்கியுள்ளது.

அமைச்சின் நிறுவனமான மலேசிய அளவை, வரைபடத் துறை JUPEM கடந்த மார்ச் 18ஆம் நாள் உருவாக்கிய இந்தச் செயலி மலேசிய ஆயுதப் படை, தேசியப் பாதுகாப்பு மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் மத்தியிலும் கோவிட்-19 தொற்று குறித்த ஆகக் கடைசித் தகவல்களை வழங்குவதாக அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பு நோக்கங்களுக்காகவும் ஒட்டு மொத்த மேற்பார்வை வசதிக்காகவும் இந்த WebGIS செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி, இயற்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா குறிப்பிட்டார்.

Exit mobile version