Site icon அநேகன்

தற்காப்பு அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் இன்றைய செய்தியாளர் சந்திப்பின் சாரம்:

1. நாட்டில் இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடைமுறையில் உள்ள வேளை, 97% மக்கள் அதனைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

2. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் 51 பகுதிகளில் 171 கிருமிநாசினி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

3. நாடு முழுவதும் 38,754 திடீர் சோதனைகள் செய்யப்பட்டன.

4. நேற்று வரையில் நாடு முழுவாதும் 146 நோய்த்தடுப்பு முகாம்கள் செயல்பட்டன.

5. அதில் நேற்று வரையில் தாயகம் திரும்பிய 612 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

6. நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்படும் ரிம 1000 அபராதம் குறைவு என சிலர் கருதியிருக்கக் கூடும்.

7. நேற்று நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறிய 666 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் 392 பேருக்கு ரிம 1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

8. கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் நேற்று வரையில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை மீறியதற்காக 37, 479 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

9. கோவட்-19 நோய்த்தொற்று தொடர்பான பொய் செய்திகளைப் பரப்பியது தொடர்பில் 207 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன. 23 பேர் நீதி மன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளனர்.

Exit mobile version