Site icon அநேகன்

கோவிட் 19 : இன்று 45 சம்பவங்கள் பதிவு! 135 பேர் குணமடைந்துள்ளார்கள்!

புத்ராஜெயா, மே. 6-

மலேசியாவில் இன்று கோவிட் 19 நோய் தொற்று காரணமாக 45 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் மரண எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிசாம் அப்துல்லா கூறினார்.

இந்த காரணமாக இதுவரையில் இந்த நோய் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,428 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,619 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று காரணமாக 22 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் 9 பேர் செயற்கை சுவாச உதவியை நாடியுள்ளார்கள்.

இந்த நோய் தொற்றின் காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரையில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 உயர்ந்துள்ளது.

இன்று 135 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,702ஆக அதிகரித்துள்ளது. இது 73.15 விடுக்காடு ஆகும்

Exit mobile version