Site icon அநேகன்

அன்வாரின் ஓரின புணர்ச்சி விவகாரத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை! ரமேஷ் ராவ்

பெட்டாலிங் ஜெயா, ஆக. 27-

எதிர்க்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மை ஓரின புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக ஹய்டில் கூறிய விவகாரத்தில் தாம் எந்த வகையில் சம்பந்தப்படவில்லை என மலேசியச் சமூகநல சேவை இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரமேஷ் ராவ் கூறினார்.

ஹய்டின் தம்மை நாடி இந்த விவகாரம் தொடர்பில் உதவி கேட்டதற்கிணங்க அவரது மருத்துவ அறிக்கைக்காக மட்டுமே தாம் உதவியதாக பெட்டாலிங் ஜெயாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கினார்.

2013ஆம் ஆண்டு பல தங்கும் விடுதிகளில் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்முடன் ஓரின புணர்ச்சிக் கொண்டதாக ஹய்டின் என்ற நபர் அண்மையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 3ஆவது வாக்குமூலத்தில், இந்த விவகாரம் தொடர்பில் தாம் ஏமாற்றப்படுவதாக ஹய்டில் கூறியிருந்தார்.
இதில் சமூக இயக்கத்தின் தலைவர் ரமேஷ் ராவின் பெயரும் அடிப்பட்டதால், அண்மையில் அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் 6 மணிநேரம் விசாரிக்கப்பட்டார். இது குறித்து இன்று அவர் விளக்கம் அளித்தார்.

சமுக ஊடகத்தின் வழி ஹய்டில் தம்மைத் தொடர்பு கொண்டு, டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உண்மை முகத்தை மக்களுக்குக் காட்ட வேண்டும். அதற்கு நீங்கள் உதவ வேண்டுமென தம்மைக் கேட்டுக் கொண்டதாக ரமேஷ் ராவ் கூறினார். அப்போது அவரை நேடியாகச் சந்தித்து முழு ஆதாரங்களைத் தாம் திரட்டியதாகவும் ரமேஷ் கூறினார்.

ஹைடில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதாகவும், அதன் பின்னர் வாக்குமூலம் வழங்குவதாகவும் உறுதியளித்தார். ஆனால் அவரது 2ஆவது வாக்குமூலமும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. மருத்துவ பரிசோதனைக்காக 5000 மலேசிய ரிங்கெட் வழங்கினேன். அதன் பிறகு ஹய்டில் காணாமல் போய்விட்டார்.

இந்த விவகாரத்தில் அஸ்மின் அலி உட்பட இதர அமைச்சர்களின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவதையும் ரமேஷ் ராவ் மறுத்தார். போலீஸ் ஹய்டிலை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இதில் இருக்கும் உண்மை வெளிவரும். ஹய்டின் வழங்கி 3 வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை விசாரித்து மக்களுக்கு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டுமென ரமேஷ் ராவ் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version