Site icon அநேகன்

மின்னலின் தேசிய தின கொண்டாட்டம்!

கோலாலம்பூர், செப். 8-

தேசிய தினத்தை முன்னிட்டு மின்னல் பண்பலை நேயர்களுக்காக மலேசியாவே என் சொர்கம் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு 1 நிமிட காணொளி போட்டியையும் சிறுவர்களுக்காக பரிவுமிகு மலேசியா எனும் தலைப்போடு சித்திரம் வரையும் போட்டியையும் செய்தது. இவ்விரு போட்டிகளுக்கும் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.

இப்போட்டிகளின் பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை RTM அங்காசாபூரியில் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

இப்போட்டிகளின் வெற்றியாளர்களை கொண்டாடும் வகையில் இந்த பரிசளிப்பு விழா நிர்ணயக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளோடு புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது. நம் நாட்டின் முன்னணி இயக்குநர் விமலா பெருமாள் மற்றும் புத்ரா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் வடிவமைப்புத் துறையின் மூத்த விரிவுரையாளர் வேலு பெருமாள் போட்டியாளர்களின் படைப்புகளை மதிப்பாய்வு செய்தனர்.

தேசிய மாத கொண்டாத்தை இன்னும் மெருகூட்டும் வகையில் சுபாங் ஜயா துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் அமைந்தது. வெற்றியாளர்களுக்கு மின்னல் நிர்வாகி திருமதி சுமதி வடியப்பன் மாதிரி காசோலையையும் நற்சான்றிதழையும் எடுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நளினி அச்சுதன்.

இயக்குநர் விமலா பெருமாள்

இது போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மின்னல் பண்பலை நேயர்களிடையே தேசப்பற்று உணர்வை மேலோங்க செய்ய துணைபுரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாதத்தை முன்னிட்டு மின்னல் பண்பலையில் பல சிறப்பு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் இது போன்ற போட்டிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version